தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




7.7.09

கன்னியாகுமரி - பாகம்(5)

விவேகானந்தர் பாறை: கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கே வங்கக்கடலில் அருகருகே அமைந்த இரு பாறைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் மிகுந்த கட்டமைப்புடன் அழகாக கடலில்
இருபாறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்துள்ளனர். இது குமரிமுனையை நோக்கும் முகமாக உள்ளது. இது கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சிறப்புகள்: இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தர் முழு உருவச்சிலை, பகவதிஅம்மனின் கால் தடம், நூலகம், தியானமண்டபம், ஹெலிகாப்டர் இறங்குதளம், சூரிய நாட்காட்டி ஆகியவை சிறப்புவாய்ந்தவை.

திருவள்ளுவர் சிலை: விவேகனந்தர் பாறைக்கு தென் மேற்கு திசையில் உள்ளது. இந்த சிலை முற்றிலும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் உயரம் 133 அடி - இது திருக்குறள் அதிகாரங்களைகுறிக்கும்(133 - அதிகாரங்கள்). இது குமரியின் எழிலுக்கு எழில் சேர்ப்பதாக உள்ளது.இதனை குமரி மாவட்டத்தில் உள்ள கிழக்குகடற்கரை கிராமங்கள், வட்டக்கோட்டை, கூடங்குளம் பகுதி(சுமார் - 20 கி.மீ தொலைவில்) இருந்தும் காணலாம். இதன் உட்புறம் குகை போல் காற்றுசென்று வரும்வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. இரவு நேரங்களில் ஒளி வெள்ளத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும்.

திருவள்ளுவர்சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றிற்கு சென்றுவர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விசைபடகுகளை கட்டணத்துடன் இயக்கிவருகிறது. (படகு சவாரி மிகுந்த மகிழ்ச்சி தரும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.)

காந்தி மண்டபம்: தேச தந்தை மகாத்மா கந்தி அவர்கள் மறைந்த பின் அவர் அஸ்தி குமரிமுனையில் கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன் கரையில் வைக்கப்பட்ட இடத்தில் அவர் நினைவாக எழுப்பபட்ட எழில் கோவில் தான் இது. இதன் மையப்பகுதியில் பகுதியில் நினைவு சின்னமும் தியான மண்டபமும். அமைந்துள்ளது.

சிறப்பு: மகாத்மா காந்தி நினைவை குறிக்கும் வகையில் அக்டோபர் 2ம் நாள், பகல் 12 மணிக்கு அவர் நினைவுச் சின்னத்தில் சூரிய ஒளி விழும் (அன்றைய தினத்தில் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது) இந்த மண்டபத்தில் காந்தி அவர்களின் வாழ்க்கை புகைப்படங்களாய் காட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் காந்தி அவர்களின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.


காமராசர் நினைவுமண்டபம்: கந்திமண்டபத்திற்க்கு அருகில் பெருந்தலைவர் திரு காமராசர் அவர்கள் நினைவாக தமிழக அரசால் கட்டப்பட்ட நினைவு

மண்டபம் இது. இதில் காமராசர் சிலையும் அவர் வாழ்ந்த கால புகைப்படங்களும் அவர் நினைவை போற்றி புகழும்வண்ணம் உள்ளது.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...

மூலம்: கண்டதும் கேட்டதும்.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் எழில்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...
வலைபூ மேலும் பூக்கும்...

1 கருத்து:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பயனுள்ள தகவல்கள், புகைப்படங்கள்! இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே என்று எண்ண வைக்கும் அளவிற்கு மிகச் சுருக்கமாக!