தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




7.7.09

கன்னியாகுமரி - பாகம்(5)

விவேகானந்தர் பாறை: கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கே வங்கக்கடலில் அருகருகே அமைந்த இரு பாறைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் மிகுந்த கட்டமைப்புடன் அழகாக கடலில்
இருபாறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்துள்ளனர். இது குமரிமுனையை நோக்கும் முகமாக உள்ளது. இது கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சிறப்புகள்: இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்தர் முழு உருவச்சிலை, பகவதிஅம்மனின் கால் தடம், நூலகம், தியானமண்டபம், ஹெலிகாப்டர் இறங்குதளம், சூரிய நாட்காட்டி ஆகியவை சிறப்புவாய்ந்தவை.

திருவள்ளுவர் சிலை: விவேகனந்தர் பாறைக்கு தென் மேற்கு திசையில் உள்ளது. இந்த சிலை முற்றிலும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் உயரம் 133 அடி - இது திருக்குறள் அதிகாரங்களைகுறிக்கும்(133 - அதிகாரங்கள்). இது குமரியின் எழிலுக்கு எழில் சேர்ப்பதாக உள்ளது.இதனை குமரி மாவட்டத்தில் உள்ள கிழக்குகடற்கரை கிராமங்கள், வட்டக்கோட்டை, கூடங்குளம் பகுதி(சுமார் - 20 கி.மீ தொலைவில்) இருந்தும் காணலாம். இதன் உட்புறம் குகை போல் காற்றுசென்று வரும்வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. இரவு நேரங்களில் ஒளி வெள்ளத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும்.

திருவள்ளுவர்சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றிற்கு சென்றுவர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விசைபடகுகளை கட்டணத்துடன் இயக்கிவருகிறது. (படகு சவாரி மிகுந்த மகிழ்ச்சி தரும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.)

காந்தி மண்டபம்: தேச தந்தை மகாத்மா கந்தி அவர்கள் மறைந்த பின் அவர் அஸ்தி குமரிமுனையில் கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன் கரையில் வைக்கப்பட்ட இடத்தில் அவர் நினைவாக எழுப்பபட்ட எழில் கோவில் தான் இது. இதன் மையப்பகுதியில் பகுதியில் நினைவு சின்னமும் தியான மண்டபமும். அமைந்துள்ளது.

சிறப்பு: மகாத்மா காந்தி நினைவை குறிக்கும் வகையில் அக்டோபர் 2ம் நாள், பகல் 12 மணிக்கு அவர் நினைவுச் சின்னத்தில் சூரிய ஒளி விழும் (அன்றைய தினத்தில் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது) இந்த மண்டபத்தில் காந்தி அவர்களின் வாழ்க்கை புகைப்படங்களாய் காட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் காந்தி அவர்களின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.


காமராசர் நினைவுமண்டபம்: கந்திமண்டபத்திற்க்கு அருகில் பெருந்தலைவர் திரு காமராசர் அவர்கள் நினைவாக தமிழக அரசால் கட்டப்பட்ட நினைவு

மண்டபம் இது. இதில் காமராசர் சிலையும் அவர் வாழ்ந்த கால புகைப்படங்களும் அவர் நினைவை போற்றி புகழும்வண்ணம் உள்ளது.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்...

மூலம்: கண்டதும் கேட்டதும்.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் எழில்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...
வலைபூ மேலும் பூக்கும்...

20.6.09

கன்னியாகுமரி பாகம் (4)

கன்னியாகுமரி பாகம் (4)


எனது வலைப்பூவை சற்று விசாலமானமுறையில் அறிமுகப்படுத்த முயற்சித்தேன், அதற்காக இணைய முகவரி பதிவு செய்துள்ளேன். (www.ragubathi.in)
அதன் பக்கங்களை அழகுபடுத்தும் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க (தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது)




அதன் இடைஇடையே சில பணி நிமிர்தமான தடைகள், குடும்பத்தில் மங்கல நிகழ்சிகள் என வலை தகவல்களை விட்டு வெளியே வந்துவிட்டதாய்...ஒரு சின்னவருத்தம்... ஆனால் குடும்பத்தில் மிக மகிழ்சியான நிகழ்வு, எனது தங்கையின் திருமணம், விட்டுபோகும் நிலையிலிருந்த உறவுகள் புதுப்பிக்கபட்ட மகிழ்ச்சி பல முகங்களில்...
திருமண கனவுகளில் இருந்த இரு மனங்கள் இணைந்தன, எனக்கும் மகிழ்ச்சி தான்,





ஆனால் எனக்காக திறக்க உள்ள இல்லற சிறைகம்பிகள் வெகு அருகில் தெரிகிறதே...சிங்கார சென்னையை தனியாக சுற்றிக்கொண்டு அவ்வப்போது (கன்னியா)குமரியை வலம்வந்தும். எனக்கும், பணிக்கும், வலைக்கும் மட்டுமே நேரம் செலவழித்த என் மீதமுள்ளநேரத்தை பங்குகொள்ள யார் வருவாரோ...! காலம் சொல்லட்டும், என் தந்தை முடிவு செய்யட்டும். சரி நாம், நம் கதைக்கு வருவோம்...

கன்னியாகுமரி நான்காம் பகுதியில் குமரியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்ப்போம்,

1.விவேகானந்தர் பாறை
2.திருவள்ளுவர் சிலை
3.காந்தி நினைவு மண்டபம்
4.காமராசர் நினைவு மண்டபம்
5.குமரி காட்சி கோபுரம்
6.தமிழ் அன்னை பூங்கா
7.நடமாடும் துறவிகள் காட்சி அரங்கம்
8.பே-வாட்ச் (உல்லாச பூங்கா)

மற்றும் பல அதிசயிக்கும் இடங்கள் உள்ளன.

இந்த சுற்றுலாத்தலங்களை பற்றி விரிவாக பார்க்கும் முன் குமரிக்கு எழில்கூட்டும் நிகழ்வுகளை தெரிந்துகொள்வோம்.

கன்னியாகுமரி என்றதும் நினைவுக்கு வருவது முக்கடலும் சூரியனும் தான்.வங்கத்தில் எழுந்து தங்கமென தகதகத்து அரபிக்கடலில் விழுவதுதான்...

சூரியன் தான் அது. அதிகாலை வங்ககடலில் எழுந்த்து பகல் முழுதும் சுற்றி மலையில் அரபிக்கடலில் அஸ்தமனம் ஆவதுதான். (அஸ்த்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல... மேற்கில் மறைந்தால் கிழக்கில் முளைக்கும் - பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது)இதை இங்கே காணலாம்...


மூலம்: கண்டதும் கேட்டதும்.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் தென்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...
வலைபூ மேலும் பூக்கும்...

29.1.09

கன்னியாகுமரி - பாகம் (3)

கன்னியாகுமரி - பாகம் (3)
---------------------------------
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்
கோவில் மூன்றடுக்கு பிரகாரங்களை கொண்டது, முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது, கோவிலின் கருவறையில் தேவி கிழக்கு நோக்கி நின்ற முகமாக தவக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் தருகிறார்.


முதல் பிரகாரம்:
இதனை சுற்றியுள்ள முதல் பிரகாரம் கருங்கற்களால் கூரைவேயப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சிற்ப வேலைகளை காணலாம். முதல் பிரகாரத்தின் முன்பகுதியில் மண்டபம் ஒன்று உள்ளது, கோவில் திருவிழா மற்றும் பூஜை நேரங்களில் வாத்தியகலைஞர்கள் அமர்ந்து வாசிக்கவும் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. கோவிலின் சுவர்களில் பண்டைய மன்னர்கள் கோவிலுக்கு வளங்கிய நிலக்கொடைபற்றியும், கோவிலின் வரலாறு பற்றியும் எழுதப்பட்டிருந்தது.வரலாற்று சிறப்புகள் கொண்ட இத்தகு கல்வெட்டுகள் தற்கால பராமரிப்பு பணிகளின் போது சிதைக்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட கோவிலின் சுவர்களில் சிதைந்த கல்வெட்டுகளை காணலாம். கோவிலின் முதல் பிரகாரத்திலிருந்து வெளியே செல்லும் வாசல் மிகவும் குறுகலாகவும் உயரம் குறைந்தும் உள்ளது.


இரண்டாம் பிரகாரம்:
இரண்டாம் பிரகாரம் மிகவும் அகன்று தூண்கள்களால் தாங்கப்பட்ட கருங்கற்சிற்ப கூரையால் மூடப்பட்டுள்ளது. கூரையின் மேற்பகுதி, வெளிச்சம், காற்றோட்டமாக இருக்க மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் கோவில் கிணறு அமைந்துள்ளது. இது இரும்புகம்பிகளால் ஆன தட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.கோவில் முன் மண்டபத்திலிருந்து கிணற்றுக்கு செல்ல பாதாளப் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. இதன் பயன்பாட்டு கட்டுப்பாடு கோவில் மேல்சாந்திகள் வசம் உள்ளது. கோவில் தேவைகளுக்கு தேவையான நீர் இதிலிருந்து எடுக்கப்படுகிறது.மண்டபத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு நோக்கி வாசல்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாசலில் வெண்கலத்தால் ஆன கொடிமரம். அமைந்துள்ளது. இதற்க்கு உட்புறமாக பலிபீடம் அமைந்துள்ளது. கோவிலின் நிலை, ஜன்னல்கள் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகள் மரத்தில் சித்திரவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன.


சிங்க தூண்கள்:
வடக்கு வாசலின் இருபுறங்களிலும் சிங்கமுகதூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்களில் உள்ள சிங்கங்களின் வாயினுள் சுளலும் கருங்கற்பந்துகள் உள்ளன, சிங்கமும் பந்தும் ஒரேகல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளன (பந்து வெளியேவராது). இது ஒரு சிறந்த சிற்பவேலைப்பாடாகும்.இதனை தொடர்ந்து மேற்கு புறத்தில் நவராத்திரி மண்டபமும், கிழக்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பல்லாக்கு மண்டபமும்,அமைந்த்துள்ளது.

வெளிபிரகாரம், கோபுரம், ஆறாட்டு மண்டபம் பற்றி பாகம் நான்கில்...



வளம் கொண்ட தென்குமரி, -தமிழ்
மணம் கொண்ட கன்னியாகுமரி,
என்றும் சிறப்பாள் குமரியாக !



மூலம்: முன் தலைமுறை செவிவழி செய்தி தொகுப்பு.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் தென்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...