தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




22.12.08

கன்னியாகுமரி பாகம் (2)

-------------------------------------------------------
ஸ்ரீதேவி பகவதி அம்மன் கோவிலின் விழாக் காலங்கள்.

வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள்
ஆடி அம்மாவாசை
நவராத்திரி திருவிழா 10 நாட்கள் மற்றும் பரிவேட்டை
திருகார்த்திகை திருவிழா
தை அம்மாவாசை

இத்திருநாட்கள்
யாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இத் திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறப்பாக அலங்கரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை 5.30 மணிக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்.
மதியம் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 6.30 மணிக்கு சாயங்கால பூஜையும் நடைபெறுகின்றது

அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் நகை அலங்கரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலில் அம்பாள் கிழக்கு நோக்கி நின்று தனியாக தவக்கோலத்தில் கையில் ஜெபமாலையுடன் அருள்பாலிக்கிறார்.

இந்திரகாந்த வினாயகர், நாகராஜர், பாலசௌந்தரி அம்மன், தியாகசௌந்தரி அம்மன்,மற்றும் கால பைரவர் ஆகிய உப தெய்வங்களும் உள்ளன. ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு தனியாக ஆலயம் உள்ளது கோவிலில் குங்குமம் மற்றும் சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில் கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலைய துறையின் கட்டுப்பட்டில் உள்ளது.

பரிவேட்டை திருவிழா.

பாணாசுரவதம் - இதுவே பரிவேட்டை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாணாசுரன் எனும் அரக்கன் சிவனை நோக்கி தவமிருந்து ஒரு வரம் பெற்றான், அவ்வரத்தின் படி, தான் ஒரு கன்னிபெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும். பாணாசுரனை வதம் செய்வதற்க்காக பார்வதி தேவி, பகவதி அம்மன் அவதரித்தார்.மலையத்வஜன் மகளாய் பிறந்தது வளர்ந்து வந்தார், கன்னியாக இருக்கும் போது சிவபெருமான் அம்பாள் மீது மிகுந்த காதல் கொண்டு மணந்துகொள்ள விரும்பினார். அவர் மலையத்வஜனிடம் பெண் கேட்டு சென்றார். தேவியானவர் மூன்று நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதிதார். நிபந்தனையாவது - கண் இல்லாத தேங்காய், காம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு ஆகிய பொருட்களுடன் சூரிய உதயத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்கு வருமாறு கோரினார். அம்மனின் நிபந்தனை பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டார். வழுக்கம்பாறை அருகில் வரும்போது நாரதன் சேவலாய் மாறி விடியலை அறிவிப்பதை போல் கூவினான். இதனால் சூரிய உதயம் நிகழ்ந்துவிட்டதென எண்ணி சுசீந்திரம் திரும்பினார். நாரதமுனிவர் ஏன் சேவலாக மாறி கூவினார் என்றால் அம்பாளின் அவதார நோக்கம் கன்னியாகவே பாணாசுரனை வதம் செய்ய வேண்டும், இது நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். நவராத்திரி திருநாளில் பத்தாம் நாளான விஜயதசமி அன்று கன்னியாகுமரியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சலிங்கபுரம் - மஹாதானபுரம்(முன்னாளில் இப்பகுதி பாஞ்சாலிங்க மகாதானபுரம் என்று அழைக்கபட்டது)பகுதியில் வதம் செய்தார். இந்த நாளில் தான் பரிவேட்டை திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது.

பரிவேட்டை சிறப்புகள்:

நவரத்திரி திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முதல் திருநாளில் கோவிலின் கொலுமண்டபத்தில் அம்பாள் அலங்கார மேடையில் சிறப்புஅலங்கரத்துடன் வீற்றிருக்கிறார். நவராத்திரி கொலு படிகளும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. விஜயதசமி அன்று (பத்தாம் நாள்) காலை பூஜைக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் அமர்ந்து மதியான அன்னதானத்திற்க்கு பின் யானைகள், குதிரைகள், முத்துக்குடை, நாதஸ்வரம், செண்டை, பொம்மலாட்டம், தையம், பஜனை, ஆகியவற்றுடன் ஊர்வலமாக வருகிறார். எலுமிச்சை பழத்தால் ஆன மாலை, வாழைப்பழம் பன்னீர், மற்றும் பூஜைப்பொருட்களுடன் சுருள்தனை காணிக்கையாக பக்தர்கள் தருகின்றனர். பல்லாயிர கணக்கான பக்தர்கள் சூழ விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பரமார்த்தலிங்கபுரம், வழியாக காரியக்காரமடம் சென்று அதன் அருகில் உள்ள வேட்டை மண்டபத்திற்க்கு வந்து, மண்டபத்தை வெள்ளி குதிரை வாகனத்தில் மூன்று சுற்று சுற்றி வந்து, பின்னர் இளநீரில் அம்பால் குத்தி பாணாசுரனை வதம் செய்கிறார். இளநீரில் பாணாசுரன் இருப்பதாக உருவகம் செய்து குத்தபடுகிறது. பின்னர் அம்பாள் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக மீண்டும் காரியக்காரமடம் சென்று இளைப்பாறி, பின் பல்லக்கில் ஏறி குமரிமுனை நோக்கி கோவிலை அடைகிறார், பின்னர் கோவிலின் கிழக்குவாசல் திறக்கப்பட்டு, குமரி கடலில் ஆரட்டு முடித்து கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அமர்கிறார்.

மூலம்: கதைகள் - முன் தலைமுறை செவிவழி செய்தி தொகுப்பு.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் வளங்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...