தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




29.1.09

கன்னியாகுமரி - பாகம் (3)

கன்னியாகுமரி - பாகம் (3)
---------------------------------
கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்
கோவில் மூன்றடுக்கு பிரகாரங்களை கொண்டது, முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது, கோவிலின் கருவறையில் தேவி கிழக்கு நோக்கி நின்ற முகமாக தவக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் தருகிறார்.


முதல் பிரகாரம்:
இதனை சுற்றியுள்ள முதல் பிரகாரம் கருங்கற்களால் கூரைவேயப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சிற்ப வேலைகளை காணலாம். முதல் பிரகாரத்தின் முன்பகுதியில் மண்டபம் ஒன்று உள்ளது, கோவில் திருவிழா மற்றும் பூஜை நேரங்களில் வாத்தியகலைஞர்கள் அமர்ந்து வாசிக்கவும் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. கோவிலின் சுவர்களில் பண்டைய மன்னர்கள் கோவிலுக்கு வளங்கிய நிலக்கொடைபற்றியும், கோவிலின் வரலாறு பற்றியும் எழுதப்பட்டிருந்தது.வரலாற்று சிறப்புகள் கொண்ட இத்தகு கல்வெட்டுகள் தற்கால பராமரிப்பு பணிகளின் போது சிதைக்கப்பட்டுள்ளன. இப்போதும் கூட கோவிலின் சுவர்களில் சிதைந்த கல்வெட்டுகளை காணலாம். கோவிலின் முதல் பிரகாரத்திலிருந்து வெளியே செல்லும் வாசல் மிகவும் குறுகலாகவும் உயரம் குறைந்தும் உள்ளது.


இரண்டாம் பிரகாரம்:
இரண்டாம் பிரகாரம் மிகவும் அகன்று தூண்கள்களால் தாங்கப்பட்ட கருங்கற்சிற்ப கூரையால் மூடப்பட்டுள்ளது. கூரையின் மேற்பகுதி, வெளிச்சம், காற்றோட்டமாக இருக்க மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் கோவில் கிணறு அமைந்துள்ளது. இது இரும்புகம்பிகளால் ஆன தட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.கோவில் முன் மண்டபத்திலிருந்து கிணற்றுக்கு செல்ல பாதாளப் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. இதன் பயன்பாட்டு கட்டுப்பாடு கோவில் மேல்சாந்திகள் வசம் உள்ளது. கோவில் தேவைகளுக்கு தேவையான நீர் இதிலிருந்து எடுக்கப்படுகிறது.மண்டபத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு நோக்கி வாசல்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாசலில் வெண்கலத்தால் ஆன கொடிமரம். அமைந்துள்ளது. இதற்க்கு உட்புறமாக பலிபீடம் அமைந்துள்ளது. கோவிலின் நிலை, ஜன்னல்கள் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகள் மரத்தில் சித்திரவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன.


சிங்க தூண்கள்:
வடக்கு வாசலின் இருபுறங்களிலும் சிங்கமுகதூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்களில் உள்ள சிங்கங்களின் வாயினுள் சுளலும் கருங்கற்பந்துகள் உள்ளன, சிங்கமும் பந்தும் ஒரேகல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளன (பந்து வெளியேவராது). இது ஒரு சிறந்த சிற்பவேலைப்பாடாகும்.இதனை தொடர்ந்து மேற்கு புறத்தில் நவராத்திரி மண்டபமும், கிழக்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பல்லாக்கு மண்டபமும்,அமைந்த்துள்ளது.

வெளிபிரகாரம், கோபுரம், ஆறாட்டு மண்டபம் பற்றி பாகம் நான்கில்...



வளம் கொண்ட தென்குமரி, -தமிழ்
மணம் கொண்ட கன்னியாகுமரி,
என்றும் சிறப்பாள் குமரியாக !



மூலம்: முன் தலைமுறை செவிவழி செய்தி தொகுப்பு.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் தென்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...

கருத்துகள் இல்லை: